சிங்கப்பூரில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று
சிங்கப்பூரில் வேகமாக
தற்போது கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 728 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த
சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு சுமார் 200 பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால்
நேற்று முன்தினம் 400க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில்
லாக்டவுன் நடைமுறையில் இருக்கின்றன போதும் வெளிநாட்டினர் தங்கும் இடங்களில்தான் கொரோனா தொற்று சமூகப் பரவலாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது.
நேற்று
கொரோனா உறுதி செய்யப்பட்டோரில் 600க்கும் அதிகமானோர் வெளிநாட்டினர் தங்கும் விடுதிகளுடன் தொடர்பு உள்ளவர்கள் என கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை