சீனாவில் 39 பேருக்கு கொரோனா உறுதி
கொறோனா
வைரஸ் அச்சுறுத்தல் முதன்முதலாக அடையாளப்படுத்தப்பட்ட சீனாவில் அண்மைய நாட்களாக அதன் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று(திங்கட் கிழமை) மட்டும், புதிதாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து
தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்கமாக்குவதற்கு சீன அரசு முடிவு செய்துள்ளது.
சமீபகாலமாக
கொறோனாவின் பாதிப்பு குறைவடைந்ததையடுத்து வூஹான், பீஜிங் நகரங்களில் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சிறிதளவு தளர்த்தப்பட்டு, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.
இந்நிலையில்,
உலகின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்த சீனர்கள், விமானங்கள் மூலமாக அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கணிசமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று
புதிதாக அடையாளம் காணப்பட்ட 39 பேரில் 38 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால், பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகளை தொடரும்படி அரசுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கருத்துகள் இல்லை