அரியாலை – தாவடி உட்பட மொத்தமாக 14 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன
இலங்கையில்
கொரோனா தொற்று அபாயத்தால், உட்பட மொத்தமாக 14 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம்,
கம்பஹா மாவட்டத்தில் கொச்சிக்கடை போருதோட்டை பகுதியும், ஜா -எலவில் இரு பகுதிகளும், யாழ் மாவட்டத்தில் அரியாலை – தாவடி பகுதியும், களுத்துறை மாவட்டத்தில் அட்டுலுகம மற்றும் பேருவளை பகுதிகளும், கண்டி மாவட்டத்தில் அக்குரணை பகுதியும், புத்தளம் மாவட்டத்தில் கடையன்குளம் மற்றும் நாத்தாண்டியவின் ஒரு பகுதியும், கொழும்பு மாவட்டத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் டி. வோஸ் லேன், மருதானை பொலிஸ் பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, இரத்மலானை – அர்ஜன மாவத்தை ஆகிய பகுதிகளும், குருநாகல் மாவட்டத்தில் கட்டுப்பொத்த – கெகுனுகொள்ள பிரதேசத்தின் ஒரு பகுதியும், மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ மற்றும் கொஹு கொட பகுதிகளும் இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை