யாழ்ப்பாணம் உள்பட 6 மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்கும் – ஏனைய பகுதிகளுக்கு நாளை தற்காலிக தளர்வு
யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய 6 மாவட்டங்களில் நடைமுறை ப்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
ஏனைய 19 மாவட்டங்களில்
பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (ஏப்ரல் 6) திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.பின்னர் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக
மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து
முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை