இலங்கையில் கொரோனாத் தொற்று இன்று எவருக்கும் இல்லை!
இலங்கையில்
கொரோனா தொற்றுக்கு உட்பட்டதாக இன்று எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதர சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று
பிற்பகல் 4.30 மணி வரையான இருபத்துநான்கு மணி நேரத்துக்குள் எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய நாள் ஒருவர் மட்டும் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 190 ஆக காணப்பட்டுவருகிறது.
இருப்பினும்
ஐம்பது பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். இதுவரை ஏழு உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனபோதிலும்
சர்வதேச ரீதியிலான கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தே வருகிறது.
சர்வதேச
ரீதியாக சற்று முன்னர் (இலங்கை நேரம் பிற்பகல் 6.20 மணி) நிலவரத்தின்படி 97 ஆயிரத்து 242 பேர் உயிரிழந்துள்ளனர். 16 இலட்சத்து 23 ஆயிரத்து 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 இலட்சத்து 63 ஆயிரத்து 239 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை