Breaking News

பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்து-பேராயர் மெல்கம் ரஞ்சித்


பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.
பேராயரினால் இன்று(30.03.2020) வெளியிடப்பட்ட விசேட அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையில்,
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையில் அதிகளவானவர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடுவது பொருத்தமற்றதொரு செயற்பாடாகும்.
அதனடிப்படையிலேயே பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தினையும் இரத்துச் செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பரிசுத்த வாரமாக கடைப்பிடிக்கப்படும் இந்த வாரத்தில் திங்கள், வியாழன், பெரிய வெள்ளி, சனி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள விசேட ஆராதனைகள் அனைத்தும் தொலைக்காட்சி வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.
இந்த ஆராதனைகளின் போது அனைத்து கத்தோலிக்கர்களும் வீடுகளில் இருந்தே தமது சமயக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை