Breaking News

மீண்டும் சிக்கலில் யாழ்ப்பாணம்


யாழ்ப்பாணத்தில் மேலும் எட்டு கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் இனம் காணப்பட்டுள்ள நிலையில் குடாநாட்டின் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்படவாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை இப்பகுதிகளில் அடுத்துவரும் நாள்களில் விரைவாக கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா பாதித்த நோயாளிகள் யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
எனவே இனம்காணப்பட்ட பகுதிகளை பாதுகாப்பு கருதி மீளவும் முடக்குவது தொடர்பில் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.அநேகமாக இந்த முடிவு இன்று எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அரசின் கட்டுப்பாடுகளை மீருவதும் தொற்று பரவ காரணமாக இருப்பதால் பல இடங்கள் மூடப்படலாம் எனவும் சுகாதார அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்


கருத்துகள் இல்லை