Breaking News

மதுபோதையில் கணவன் அட்டகாசம் பெண் ஒருவர் குழந்தையுடன் தற்கொலைக்கு முயட்சி


மதுபோதையில் தினமும் கணவன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது குடும்பப் பெண் ஒருவர் குழந்தையுடன் தற்கொலைக்கு   முயன்ற சம்பவம் தென்மராட்சி கெற்பேலிப் பகுதியில் நேற்று நடந்துள்ளது.

தென்மராட்சிப் பிரதேசத்தில் ஊரடங்க அமுலில் உள்ள தினமும் மதுபோதையில் வரும் கணவர், தன்னை அடித்துத் துன்புறுத்துவதால் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பற்றைக்காடு ஒன்றுக்குள் மறைந்திருந்து பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

எனினும் அந்தப் பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர், கிராம அலுவலர் மற்றும் குடும்பநல உத்தியோகத்தருக்கு வழங்கிய தகவலையடுத்து பெண்ணும் குழந்தையும் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக வீடுகள், பற்றைக்குள் வைத்து கள், கசிப்பு, கஞ்சா என்பவற்றின் விற்பனை அதிகமாக இடம்பெற்று வருவதாகப் பொதுமக்கள் பலரும் தெரிவித்துள்ளனர். போதும் மக்களுக்குத் தேவையான அத்தியவசிய பொருட்களை தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை