Breaking News

இன்று முதல் கட்டாயமாக்கப்படும் முகக் கவசம்! பொலிஸார் அறிவிப்பு


இன்று முதல் கட்டாயமாக்கப்படும் முகக் கவசம்! பொலிஸார் அறிவிப்பு
வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தல் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக் கவச உத்தரவை செயற்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் அபாய வலையங்களாக கருதப்படும் பிரதேசங்களை தொடர்ந்து தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை