யாழில் ஊரடங்கு வேளையில் வீடு புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை
ஊரடங்கு
வேளையில் வீடு புகுந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி நகை மற்றும் பணம் என்பன கொள்ளையிட்டப்பட்டுள்ளன.
சாவகச்சேரி
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டுவில் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை 2மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணக்
குடாநாடு உள்பட நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள வேளையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு
ஓடுகளைப் பிரித்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன்- மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த
வயோதிபர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை