கொரோனாவால் 172 பேர் பலி வீதி ஓரங்களில் வைக்கப்பட்ட சடலங்கள்
ஈக்வடார்
நாட்டில் அதிக மக்கள் வாழும் பகுதியான மேற்கு குயாகுவில் வீதி ஓரங்களில் சடலங்கள் வைக்கப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த
நாட்டில் தற்போது வரை கொரோனாவால் 172 பேர் பலியாகியுள்ளனர், 3,465 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இங்கு
நோய் அதிகரித்து வருவதால் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை ஏற்றுக்கொள்வதற்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, மற்றும் சடலங்கள், கல்லறைகள்ஆகியற்றில் இடமில்லாமல் திணறுகின்றனர்.
சடலங்களை
வைக்க எந்த இடமும் இல்லாததால், சில குடியிருப்பாளர்கள் தங்களுக்கு வேறு வழியில்லாமல் தெருக்களில் உள்ள நடைபாதையில் சடலங்களை வைப்பதாக கூறுகிறார்கள்.
குயாகுவில்
நகரில் கொரோனா காரணமாக எத்தனை பேர் இறக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மார்ச்
23-30 க்கு இடையில், ஈக்வடார் அதிகாரிகள் 2.99 மில்லியன் குடியிருப்பாளர்கள் உள்ள குயாகுவில் நகரத்தின் வீடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட உடல்களை சேகரித்ததாக தேசிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குயாகுவிலின்
மேயர் சிந்தியா விட்டேரி கடந்த வாரம் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட வீடியோவில் மத்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளார்.
தற்காலிகமாக
சடலங்களை வைக்க குயாகுவில் நகரத்திற்கு கண்டெயினர்கள் வந்துள்ளன. உடல்களை நல்ல முறையில் அடக்கம் செய்யும் இடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை