புதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாப மரணம்
முல்லைத்தீவு,
புதுக்குடியிருப்பு தேவிபுரம் சந்திக்கு அண்மையில் உள்ள பாற்சாலையில் பால் கொள்வனவு செய்துவிட்டு மதில் மீது ஏறி வெளியேற முற்பட்ட இளைஞர் ஒருவர் மதில் உடைந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஊரடங்கு
சட்டம் என்பதால் மக்கள் நடமாட்டம் எதுவும் அங்கு இல்லாததால் எவரும் இந்த சம்பவத்தை கவனிக்கவில்லை.
இதன்
காரணாமாக குறித்த இளைஞர் நீண்ட நேரமாக இரத்தம் வெளியேறியதால் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
அதன்பின்னர்
பல மணி நேரத்தின் பின்னரேயே அவரை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் தெரியவருகிறது.
சம்பவத்தில்
உயிரிழந்தவர் புளியங்குளம்,ஓட்சுட்டான் பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜா சயனந்தன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக்வும்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை