நாட்டு மக்களுக்காகவும் உறவுகளுக்காகவும் கொரோணா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட நாம் தயார்-வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்
வடமாகாண
வேலையற்ற பட்டதாரிகளின் உன்னதமான அறிவிப்பு
வடமாகாண
வேலையற்ற பட்டதாரிகள் ஆகிய நாம் நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலைமையில் நாட்டு மக்களுக்காகவும் உறவுகளுக்காகவும் கொரோணா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்குவதற்கு தயாராக தயாராக உள்ளோம்
மாபெரும்
சவாலை எதிர்நோக்கி இருக்கும் அரசுடன் எமது செயற்பாடும் இணைந்து அதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளிலும் சுகாதாரப் பகுதியினரின் செயற்பாடுகளிலும் சமுர்த்தி செயற்பாடுகளிலும் ஒத்துழைப்பு நல்குவததற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு தயாராக உள்ளோம்
எமது
இச்செயற்பாடு அரசிடமிருந்து உடனடி வேலை வாய்ப்பினை எதிர்பார்த்தோ அல்லது உடனடி வேதனத்தை எதிர்பார்த்தோ அல்லது எந்தவொரு பரோபகாரத்தை எதிர் பார்த்தோ அமையவில்லை என்பதை தெரியப்படுத்துகின்றோம் என வடமாகாண வேலையற்ற
பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது
கருத்துகள் இல்லை