வவுனியா வைத்தியசாலையில் பெண் உயிரிழப்பு
வவுனியா வைத்தியசாலை க்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வயோதிபப் பெண் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததை அடுத்து அவரின் இரத்தமாதிரி அனுராதபுரம் கொரோனா தடுப்பு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்திருப்பதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம், கற்குளம் என்ற முகவரியைச் சேர்ந்த வயோதிபப் பெண் மணி ஒருவர் இரண்டுவாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதாகத் தெரிவித்து உறவினர்களால் கடந்த இரவு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுமதித்தவர்களிடம் மருத்துவர்கள் விசாரித்ததன் அடிப்படையில்,
குறித்த பெண்மணி காய்ச்சல் வருவதற்கு முன்பாக யாழ்ப்பாணம் சென்று வந்ததாகவும் இரண்டு வாரங்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
அவரின் நோய் அறிகுறிகளை விசாரித்த மருத்துவர்கள் கொரொனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பு விடுதிக்கு அவரை மாற்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றதுமே மரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் தெரியவரும் என்றும் வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை