Breaking News

AK NEWS

 கொரோனா வைரஸ்
நாளைய தினம் மட்டக்களப்பு முழுவதும் முழுமையான கதவடைப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் சந்தேக நபர்களை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்காக சிறுபான்மை சமூகங்கள் வாழுகின்ற மட்டக்களப்பின் எல்லைப் பகுதியான ஜெயந்தியாய பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்படப்போவது ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களும் என தெரிவித்து பல தரப்பிலிருந்தும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் முழு கதவடைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


1 கருத்து: